Social Icons

Pages

Friday, December 16, 2011

அன்றாட பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து .

மக்களின் அன்றாட பிரச்சனைகளில் முதலிடத்தில் இருப்பது போக்குவரத்து பிரச்சனையாகும். வீட்டில் இருந்து கிளம்பி எமது அலுவல்களை செய்து முடிப்பதுக்குள் மூச்சுத் திணறிவிடும் அளவுக்கு வாகன நெரிசல். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

Friday, November 11, 2011

நம்பிக்கையின் அடுத்த படி…

                                குடும்பத்தில் குடும்பத்தலைவனும் குடும்பத்தலைவியும் வேலைக்குச் சென்றாலே வாழ்கைச் செலவினங்களை அனுசரித்துப் போகமுடியும் என்ற நிலையில் இன்றைய அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது.

Thursday, November 10, 2011

பேஸ்புக்கின் இன்றைய நிலை




                        
  பேஸ்புக் இணையத்தளமானது ஹவாட் ஸ_க்கர் பொக் என்பவரால் தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவாக உருவாக்கப்பட்டது. இதனால் உறவுகளின் இணைவு நட்பின் இணைவு வாழ்கை துனையை கண்டுபிடித்தல் குற்றம் செய்வோர் மாட்டிக்கொள்ளல் போன்ற பல நன்மைகள் விளைந்தாலும் தீமைகளும் விளைகின்றன.

Tuesday, August 2, 2011

சர்வறோ டாலியின் தீப்பற்றிய கிராமம்

இந்த ஒவியம் அபாயத்திற்கான அறிகுறி எனவும் அழைக்கப்படும். 1939ல் வரையப்பட்டது. இது பலகையில் எண்னை வர்ணம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் ஒவியம் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது. இவ் ஒவியத்தில் ஒரு பெண் வடிவம் பல இடங்களில் முட்டுக் கொடுகப்பட்டவாறு காணப்படுகிறது. இதன் பின்னனியாக தீப்பிடித்த யசாட்முன்ற நகரம் காணப்படுகிறது. இதில் புகைமூட்டங்கள் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Thursday, July 28, 2011

சர்வறோ டாலியின் வழிந்தோடும் கடிகாரம்


               1931ம் ஆண்டு சர்வறோ டாலி இந்த ஒவியத்தினை வரைந்தார். கன்வஸ் துணியில் எண்ணை வர்ணம் கொண்டு இச் சித்திரம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. இச் சித்திரத்தில் பொருட்கள் யாவும் யதார்த்தம் அற்ற தன்மையை கொண்டுள்ளது.
                  இதில் கரைந்து போகும் மணிக்கூடு மூன்று காணப்படுகிறது.  ஒரு மணிக்கூடு மரத்தின் கிளையில் துணிபோன்ற அமைப்பில் தொங்குகின்றது. மற்றைய மணிக்கூடு இரண்டும் பொருட்கள் இரண்டின் மீது தூக்கப்பட்டுள்ளது. இதன் பின்னனியில் காணப்படும் தரைக்காட்சி சீனச் சித்திரக் கலையை நினைவு படுத்துகின்றது. இவ் ஒவியம் வழிந்தோடும் கடிகாரம் என்றும் அழைக்கப்படும்.

சர்வறோ டாலி

             ஸ்பானிய நாட்டின் பாசிலோனிய நகரின் அருகில் உள்ள கிராமத்தில் 1904ல் சர்வறோ டாலி பிறந்தார். மற்ரிக் நகரத்து நுன்கலை கல்லூலியில் நுன்கலைபயிள்றார். 1928ம் ஆண்டு தன்னை சரிலிச வாதியாக இணைத்துக் கொண்ட டாலி ஒவியத்தில் ஒரு சிக்மன் பிறைற் ஆகவே செயற்பட்டார்.
            ஓவியப் பொருட்களின் தெரிவு, ஒவிய வரைமுறையில் புதுப்புது ஒவிய உருவாக்கம், விலக்கு அபயவத்தோடு கூடிய மனித உருவாக்கங்கள், பொய்யானதும், மெய்யானதுமான கலைப் படைப்புகள் என்பன சர்வறோ டாலியின் படைப்பாக இருந்தது. விநோதமான கனவு நிலைக் காட்சிகள் டாலியின் ஒவியங்கள் வெளிப்படுத்துகின்றது.
               பல நூற்றாண்டுகளாக ஒவிய உலகில் போற்றப்பட்டு வந்த அடிப்படைகளை தகர்க்கும் வகையில் டாலியின் சிந்தனைகள், படைப்புகள் மூலம் வெளிப்பட்டது. டாலியின் ஒவியங்களில் ஒவியப் பொருளை இலகுவில் கண்டுபிடித்து விடலாம். ஏல்லோராலும் அறியப்பட்ட பொருட்கள் டாலியின் ஒவியங்களில் கற்பனை பொருந்திய விசித்திர வடிவமாக இருந்தது. இவருடைய ஒவியங்களில் நீங்காத கனவு, தீப்பற்றிய சிலந்திக் கால் உடைய ஒவியம் சிறப்புக்குரியனவாகும்.

Tuesday, July 5, 2011

அசமந்தப்போக்கால் அகற்றப்படாத கழிவுகள்

        யாழ்ப்பாணம் சந்தைப்பகுதியில் கழிவுப் பொருட்கள் சரியானமுறையில் அகற்றப்படாமல் காணப்படுகின்றது.

       கழிவுகளை சரியானமுறையில் அகற்றாமையினால் சந்தைப்பகுதியில் காணப்படும் கட்டாக்காலி நாய்கள். ஆடுகள் என்பவற்றினால் கழிவுகள் கிழறப்பட்டு பரவிக்காணப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் வியாபாரிகளும் கொள்வனவாளர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

       இந்த சந்தைப்பகுதி மாநகரசபையினரின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது.



Friday, April 1, 2011

பொது அறிவு

·       உலகிலே அதிவேகமான ரயில் சேவை – சீனாவின் மெல்லெவி ரயில் சேவை.
·       ஊலகில் இதியுயர் புகையிரதப்பாதை – சீனாவின் திபக் புகையிரத பாதை.
·       நாடாளுமன்றத்திற்காக தொலைக்காட்சி ஆரம்பித்த முதலாவது நாடு - இந்தியா.
·       உல்லாசமான விண்வெளி பயணங்களை ஊக்குவிக்கும் வண்வெளி நிலையம் - ஈஷா.
·       உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சிறந்த வீரனுக்கான விருது – அடிடாஸ் தங்கப்பாதணி.
·       ஊலக வர்த்தக சம்மேளனம் எத்தனை உறுப்பு நாடுகள் - 149.
·       எழுத்துழூலமான அரசியல் சட்டம் இல்லாத நாடு - பிரித்தானியா.
·       குமிழ்முனைப் பேனாக்கள் உலகமெங்கும் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு – 1930.
·       நோபல் பரிசு வழங்கப்படும் தினம் - டிசம்பர்-10.
·       குறைந்த வார்த்தைகளைக் கொண்ட மொழி - இத்தாலி மொழி.

Saturday, March 26, 2011

உறவு

உலகினை அழகாய் காட்டி
உறவாக வந்தாயே
உடலாலே பிரிந்தாலும்
உள்ளமதில் பிரியாமல்
உயிராக இருப்பவளே
உனதன்பை நான் காண
உன் நட்பை தந்தாயோ.....?

Thursday, March 24, 2011

உணர்வுகள்

மனதினில் ஏற்படும் உணர்வு
மகிழவல்ல வலிகள் தான்......
உணர்ச்சியைத் தூண்டும்
உச்சாகமல்ல சோகம்தான்.......
அதை தீர்க்க முயட்சிசெய்
அதில் முழ்கி விடாதே.....!

ஏக்கம்

வானில் இருந்து விண்மீன்கள்
வீழ்வதைக் கண்டு
கைகளை நீட்டி காத்திருக்கின்றேன்
கை வந்து சேராது
என்று அறிந்தும்....................!
 
Blogger Templates