Social Icons

Pages

Tuesday, January 3, 2012

பல்தேசியக் கம்பனிகளின் விளம்பரப்பலகைகள்

                பல்தேசியக்கம்பணிகளின் வருகையால் கிரிக்கெட் மைதானம் போல் ஆகிவிட்டது தற்போதைய யாழ். நகரம். திரும்பிய இடமெல்லாம் விளம்பரங்கள்  தான் நிறைந்துள்ளன. பத்திரிக்கைகளிலும் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலுமே அதிக ஆதிக்கம் செலுத்திய விளம்பரங்கள் இன்று வீதியின் ஒரு பாகமாய் இணைந்துவிட்டது.
                 இன்நிலைமைக்கு காரணம் அவர்களின் பொருட்களின் தரம் குறைவாக உள்ளமையா? அல்லது வாடிக்கையாளரை அதிகப்படுத்துவதாக நினைத்து இவர்கள் தேடும் வழிகளா? என்பது கேள்வியாகவெ உள்ளன.

 
                       இன்நிலையில் வியாபாரி ஒருவர் கூறும்போது பிரதேசசபையானது பல்தேசிய கம்பனிகள் ஒரு தொகைப்பணத்தை கொடுத்தவுடன் விளம்பரப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கி விடுகின்றது. அதனால் நாங்களும் வெறு வழியின்றி எமது கடையின் முன்னால் விளம்பரங்களை நாட்டவேண்டி உள்ளது எனத் தெரிவித்தார்.
                      சம்மந்தமே இல்லாமல் வைத்தியசாலைகள் மருத்துவ பரிசோதனை இடங்கள் போன்றவற்றின் முன்பாகவும் விளம்பரங்களை வைப்பதாள் அவை இருக்கும் இடங்களை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளதேனவும் சிலர் இவ்விளம்பரங்களினால் அதன் தரத்தை அறியாது ஏமாற்றம் அடைவதாகவும் பொதுமக்கள் சிலரும் கருத்து தேரிவித்தனர்.
                      துண்டுப் பிரசுரங்களில் விளம்பரங்களை வெளியிட்ட காலம் சென்று இன்று வானளாவிய விளம்பரப்பலகைகள் வந்து விட்டன. குடாநாட்டிற்கான போக்குவரத்துப்பாதை திறந்தவுடன் நகரில் ஆங்காங்கே புதுபுது வியாபார நிலையங்கள் முளைக்கத்தொடங்கிவிட்டன.
                     தரத்தினால் தம்வியாபாரத்தை பெருக்கிய காலம் இன்று சென்று விட்டது. அதற்குப்பதிலாக வியாபார நிலையங்கள் போன்றன தம்மை பிரபல்யப்படுத்த விளம்பரப் பலகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
                  அந்த வகையில் அன்று ஒரு கலைஞனால் நாட்கணக்கில் உருவாக்கப்பட்ட எழுத்துப் பலகைகள். இன்று டிஜிட்டல் என்னும் நவீனத்துவ வளர்ச்சியால் மாற்றம் செய்துள்ளன. இதனால் விளம்பரப்பலகை எழுதும் தொழிலையே நம்பியிருந்த கலைஞனின் பிழைப்பில் மண் விழுந்தது.
                      அன்றைய விளம்பரப்பலகைகள் சினிமா நடிகர்கள் நடிகைகளையே தமது விளம்;பரங்களில் அதிகமாகக்கொண்டு இருந்தன. இன்ற எழுத்துக்கள் மட்டுமே சில சில கம்பனிகளால் இலச்சனைகளுடன் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
                       யாழ். நகரிற்கென இருந்த அடையாளங்கள் காணமற் போய்யுள்ளன. தமிழ் மக்களின் வியாபாரத்தளமாக இருந்த யாழ்ப்பாணம் இன்று வந்து குவிந்து கொண்டிலுக்கும் பல்தேசியக் கம்பனிகளினால் பாதிக்கப்பட்ட  நிலைமைக்கு வந்து விட்டது.
                   விற்பனை நிலையத்தின் பெயயர்கள் தெரிவதைவிட அங்கு விற்கப்படும் பொருட்களின் பொயர்களே விலாசமகிவிட்டன.
                குடாநாட்டில் பல வீதிகள் கூட விளம்பரப்பலகையாகவே மாறிக்கொண்டு வருவதனைக் கூடக்காணலாம் கண்ணைக்கவரும் வர்ணங்களில் இவ் விளம்பரங்களை வெளியிட பலதொகை பணம் செலவழிக்கப்படுகின்றது.
                   தமது விளம்பரப்பலகைகளை நாட்டுவதற்கு நாட்டும் இடத்தின் உரிமையாளருக்கு பலதொகை பணம் வழங்குகின்றனர். தமது வியாபார நிலையத்தை மேம்படுத்துவதை விட்டு அதன் விளம்பரங்களுக்கே பணத்தை அதிகம் செலவிடும் நிலை உருவாகிவிட்டது.
       
                ~ தரமான பொருளிற்கு விளம்பரங்கள் தேவையில்லை
                                             என்பதே நிஜமான கருத்து.~

No comments:

Post a Comment

 
Blogger Templates