Social Icons

Pages

Sunday, January 15, 2012

முடிவினைத் தேடி…


எதிர்பார்த்து சென்றதொன்று எதிர்பாராமல் கிடைத்ததோ சில…கிராமமோ 86 குடும்பங்களைத்தான் கொண்டுள்ளது. அப்படியிருக்க என்னதான் இவர்கள் கோரிக்கை..???

யாழ்ப்பாணத்தில் இருந்து 2கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதுதான் காக்கை தீவு. J/133 கிராமசேவையாளர் பிரிவினை கொண்டமைந்துள்ள ஒரு மீனவக்கிராமம்.



காக்கைதீவுக்கு செல்வதற்காக என் தோழியுடன் 789ஆம் இலக்க பேரூந்தில் ஏறிஅமர்ந்தோம். எங்கபோறிங்க என்று கோட்டபோது காக்கைதீவு என்று சொல்லி முடித்ததும் பேரூந்தில் இருந்தவர்கள் உடனே எம்மை திரும்பிப் பார்த்தார்கள். ஏன் என்றும் புரியவில்லை… காக்கைதீவினை நெருங்கியதும் அதனை அடையாளப்படுத்தியது மீன் வாடை. பேரூந்தில் இருந்து இறங்கிய இடத்தில் முன்னால் ஒரு மீன் சந்தை இருந்தது. ஏற்கனவே பேரூந்தில் இருந்தவர்கள் இருகாக்கைதீவு இருக்கென்றும் குழப்பியதால் அங்கிருந்தவர்களிடம் காக்கைதீவு எங்குள்ளது என்று கேட்டோம். சிரித்தபடியே பதில் கூறினார் இதுதான் என்று. 

மீன் சந்தையோ பரபரப்பாக காணப்பட்டது. அங்கு சென்று சந்தையின நிலவரத்தை அறிவதற்காக உள்லே சென்று கோட்ட போது அவர்கள் மீன்களின் விலைகளை தவிர எதையும் கூறவில்லை.


  அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் பிரவேசித்தோம். சுற்றுத்தூரம் சென்றதும்  ஒரு குளம் ஊதா நிறமாக வற்றிப்போய் காணப்பட்டது. அருகிலேயே ஒரு சிறு குடிசை இருந்தது வெளியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் இதுபற்றி கேட்பதற்காக சென்றோம் அவர் சங்கச் செயலாளர் கஜேந்திரன். அவரிடம் கேட்ட போது. “இது வழமைதான் இப்ப இக்குளம் ரொம்ப வற்றியதால இப்படி இருக்கு மாரிகாலத்தில நாங்க இதில இருக்க முடியாது மாரி நேரத்தில் அதிக மழையால் இக்குளம் நிரம்பி எங்கட வீட்டுக்க எல்லாம்  தண்ணிவந்;திடும் நாங்க அந்நேரம் பக்கத்தில இருக்கிறபாடசாலைல போய் தங்கிட்டு வருவோம் அப்படியான சமயம் எங்கபாடு கஷ்ரம்தான்” என்றார்.


சிறுவர் பாதுகாப்பு நிதியம் 50லட்சம் செலவில் 2004ஆம் ஆண்டு வாய்க்கால் அமைத்துத் தந்தது. யசாக் நிறுவனமும் 10லட்சம் செலவில் ஒரு பக்க அணைக்கட்டை அமைத்துத்தந்நது ஆனாலும் இப் பிரச்சன திரவில்லை என்றார். இதற்கு தீவு என்ன என்று கேட்ட போது “இதற்கு ஒரே தீர்வு இப்பள்ளமான பகுதியை நிரப்புவதுதான்” என்று தீராது என்றதைப்போலவே கூறி முடித்தார்.

தொடர்ந்து உள்ளே சென்றோம் தண்ணிர் குளாயின் அருகில் சுமார் 25 தண்ணீர் கலன்களுக்கு மேலாக காணப்படட்டது. அது தொடர்பாக சங்கத்தலைவரிடம் கேட்ட போது “இங்கு தண்ணியோ உப்பு ஏழு பொதுக்கிணறு உள்ளது இருப்பினும் அதில் ஊற்று குறைவு இந்த தண்ணீர் தொட்டியும் UNDP கட்டித்தந்துள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் தண்ணி வராது.  ஆத்துடன் ஒரு குடும்பத்திற்கு 35லீற்றர் தான் தண்ணிஎன்றும்" கூறினார். இடையில் ஒருவர் இவர்கள் யார் என்று கேட்டபடியே வந்தார். எங்களை அறிமுகப்படுதிக் கொண்டோம்.  ஆப்போது அவர் “இதவிட இங்க ஒரு பெரிய பிரச்சனை இருக்கு என்று கூறியபடியே சென்றார். ஏன் தோழி அவரிடம் அத்தகவலை அறிவதற்காக சென்றார். நானே தண்ணீர் பிரச்சனை பற்றிய தகவலினை முழுமையாக பெற்ற விட்டு அவர்களிடம் சென்றேன் அதற்குள் அவர் சிலவற்றை கூறிவிட்டார். 

ஏனக்கோ எதுவும் புரியவில்லை.  அவர் எம்மை அழைத்து சென்றார். சற்றுத்தூரம் வந்ததும் அதோ அதுதான் மயானம் என்றார். நடைமுறையில் இல்லாத சம்பவம் குடியிருப்பு பகுதிகளுடன் மயானமா? அதுவோ உடைந்த சுவர் ஒருபுரம் புதிதாக அமைக்கப்பட்டு பாதியில் நிற்கும் மீதிசுவர். நூன்கு கம்பிகளில் ஒரு தகரம் மட்டும் தொங்கிய படி காணப்பட்டது. அப்போது எம்மை அழைத்துச் சென்றவரோ “இதோ இந்த வீட்டதான் தலைகிடந்தது என்ற மயானத்தில் முன்னால் உள்ள வீட்டை காட்டினார்.

பயமோ ஒருபுரம் என்ன என்று கோட்ட போது “ஒருநாள் விடியற்கால  5மணிக்கு இந்த வீட்டு பொம்பிள கத்திக்கொண்டு ஓடிவந்தா என்ன என்ற போது வாசலில் தலைகிடக்குது என்டாங்க போய்ப்பார்த்தபோது வாசலில் பாதி எரிஞ்சபடி நாய்கள் கொண்டுவந்து போட்டிருக்கு. இதற்கு காரணம் இங்கு ஒழுங்கான பாதுகாவலரும் இல்ல.  இங்க பல விதமான நோயாளிகள் வயதானவங்க எண்டு கொண்டுவந்து தகனம் பனறாங்க பக்கத்து ஊர்க்காரங்களும் இங்கு தான் தகனம் பன்றாங்க. ஆனால் தகனம் செய்துவிட்டு சென்றுடுவாங்க அது பாதியில் அணைந்துவிடும். ஆப்போ இங்குள்ள நாய்கள் அதை கொணர்ந்து இப்படி எங்காவது போட்டிடும். இப்படிதான் அங்கால ஒரு வீட்டிலும் காலும் கிடந்தது. துகனம் பண்ணும் போது அதால வாற மணம் தாங்க முடியாது இருக்கவே முடியாத அளவிற்கு இருக்கும்” என்று அருவருத்தவாறே கூறினார்.

“இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையா என்று கேட்ட போது இது பற்றி பல முற முறைப்பாடு செய்திட்டம். ஆனல் அரசாங்கம் எதும் செய்யுறதா  இல்ல சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாகிட்டயும் முறைப்பாடு எழுதி அனைவரும் கையப்பம் இட்டு கொடுத்தம் எதுவுமாகல.. கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்தனது மகனின் உடலை இங்கு அடக்கம் பண்ணியதால இப்ப இந்த சுவர் கட்டிதாறாங்க” என்று கூறினார். 
எங்களுக் கென்று 2கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மயானம் இருக்கு ஆனாலும்அந்த சனமும் அது தூரம் என்று இங்க தகனம் பண்றாங்க இதால எங்களுக்குத்தான் கஷ்ரம்” இதற்கு முடிவு வேணும் என்று தெரிவிதத்தார்.
இதுவரை எவரும் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார். உண்மைதான் எதிர்பாராத விதமாய் அமைந்தது. மீனவ கிராமம் என்றது அது தொடர்பான பிரச்சனையினை எதிர்பார்த்து சென்ற எமக்கு எதிர்பாராத விதமாய் வியப்பினை கொடுத்தது இங்குள்ள பிரச்சனை.

ஒரு மனிதனுக்கு தேவையானது உணவு, உடை, தங்குமிடம். ஆதில்இவர்களுக்கு பெரும் இடராக அமைந்தது தங்குமிடம் வெள்ளம் ஒரு புரம் மயானம் ஒருபுரம் நடுவில் குடி நீர் போராட்டமும் இவற்றுக்கு நடுவில் தினறும் காக்கைதீவு மக்கள் இதற்கான் முடிவைத்தேடி….
  

No comments:

Post a Comment

 
Blogger Templates