Social Icons

Pages

Tuesday, January 10, 2012

இந்த நிலமைக்கு யார் காரணம்??????

         “குழாய் தண்ணில கால்வாய் தண்ணி கலக்கிறதால எல்லாருக்கும் சரியான வருத்தம்  வருது இது பற்றி உரியாக்கட்ட சொன்னாலும்  யாருமே  எதுவும் பண்றதில்ல” என்று ஆதங்கத்துடன் தமது நிலையை வெளிப்படுத்தினர் “லாக் நகர”பெண்கள் சிலர்.



                  இந்தியாவின் சிங்காரச்சென்னையில் சேப்பாக்க மைதானத்திற்கு பின் உள்ள லாக் நகருக்குள் நுழையும் போதே அதன் அடையாளத்தினை குப்பைகள் நிறைந்த கால்வாய்களும், அதன் துர்நாற்றமும்  எமக்கு உணர்த்தியது. சாவு மேளம் அந்நகருக்குள் இருந்து ஒளித்தது. ஏம்மை நகருக்குள் வரவேற்கும் தருனம் போல் உணர்ந்து எள்ளே சென்றோம். அங்கு முதலில் கண்டது ஒரு குடிசை ஒன்றில் சலவை இயந்திரத்தினை  ஆச்சரியமாக  இருந்தது. தொடர்ந்தும் கண்டது குளிரூட்டிப் டிபட்டிகள், குளிரூட்டப்பட்ட எட்டு அடிகூட மதிக்கமுடியாத சிறு வீடு. இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிளும்.  பெறுமதிவாய்ந்த உபகரணங்கள் இவை அனைத்துமே அவர்கள் வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாது இருந்ததை காணமுடிந்தது.

              தொடர்ந்தும் மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் சென்றோம் துர்நாற்றம் எம்மால் சகிர்த்துக் கொள்ள  முடியாத  அளவிற்கு  இருந்தது. இரு கட்டிட தொகுதிகளுக்கு  இடையில் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதிமக்களிடம் கேட்ட போது “நாங்க கீழ் பகுதியில் இருக்கின்றோம். மேலே இருப்பவங்க எல்லாக்  கழிவுகளையும் கீழ போர்றாங்க அதால எல்லாம் தேங்கி புளுக்கள் எல்லாம் வருது.  குப்பைய போடாதிங்க என்று சொன்னாலும் கேக்குறாங்க இல்லை” என்று குடியிருப்பில் எள்ள சிலர் கூறினார்கள். ஆப்பகுதியில் 304 வீடுகள் குடிசை மற்று வாரியங்களாக இருக்கின்றன இதனால் இவர்களின் வாக்கினை பெறுவதற்காக மட்டுமே அரசியல் வாதிகள் வந்து செல்கின்றனர். இதை பற்றி தேர்தலின் பின் கவனம் எடுப்பதாகவும் இல்லை என்றும் கூறினர்.

                 இந்த வாழ்க்கை முறைக்கு அவர்களே காரணமாக இருப்பதுதான் இதில் கவலையான விடையமாக உள்ளது. இது பற்றி புரிந்து கொள்ள கூட அவர்களால் முடியவில்லை. இவர்கள் வறியவர்களோ.. அல்லது படிப்பறிவு அற்ற வம்சத்தினரோ அல்ல தம்மைத் தாமே வறியவராக காட்டிக்கொள்பவர்கள். தம்மை முன்னேற்றிக் கொள்ள முடியாதவர்களும் அல்ல முன்னேறவே  விரும்பாத மக்கள்.

                தொடர்ந்தும் சென்றோம் அங்கு காணப்படும் கால்வாய் சென்று எங்கு கல்கின்றது என்பதை அறிவதற்காக கேட்கும்    போது ஆச்சரியமும் கவலையுமாக இருந்தது. ஆவை சென்று கலக்கும் இடம் இந்தியாவின் முக்கியமான கடற்கரையான் மெரினா  கடற்கரை என்பது.

                இந்  நகர  மக்கள்  தொடர்பாக அறிந்த ஓர் அவலம்  இங்கு  காணப்பட்ட சென்னை மாநகராட்சி தொடக்கநிலைப்பள்ளி. இப்  பள்ளி 404 குடும்பங்களில் உள்ள பிள்ளைகளிற்காக பத்து வருடத்திற்கு முன் கட்டப்பட்டது. இங்கு பன்னிரண்டு மணிக்கு  முன்பே பாடசாலை வெறுமையாவதைக்  கண்ட அரசு ஜந்து வருடத்திற்கு முன் நிறுத்தப்பட்டு விட்டது. பாடசாலை செல்லாது தண்ணீர் குடத்துடன் செல்லும் சிறுவர்கள் என  அனைத்துமே மனதினை சோகத்தில் ஆழ்த்தியது.

             இவர்களின் நிலையினை மாற்ற இவர்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு நோய்களுக்கு உள்ளாவதை இவர்களே மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு இவர்களின் வாழ்க்கை நிலையும் காரணமாகின்றது. சென்னையில் இருக்க வேண்டும் என்ற பிடிவாதத்திலும் தமது தொழில் வாய்ப்பிற்காகவும் இருக்கின்றார்கள். இவர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் தமது வாழ்விடத்தை அமைக்கக் கூடிய சூழல் காணப்படுகின்ற போதிலும்.  இவர்கள்அதை விரும்பவில்லை. இவர்கள்  வாழ்வு இவர்களின்  கையிலேயே உள்ளது. எப்போது விழித்துக் கொள்வார்களோ..?  

No comments:

Post a Comment

 
Blogger Templates