Social Icons

Pages

Friday, December 16, 2011

அன்றாட பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து .

மக்களின் அன்றாட பிரச்சனைகளில் முதலிடத்தில் இருப்பது போக்குவரத்து பிரச்சனையாகும். வீட்டில் இருந்து கிளம்பி எமது அலுவல்களை செய்து முடிப்பதுக்குள் மூச்சுத் திணறிவிடும் அளவுக்கு வாகன நெரிசல். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

                                                அதுமட்டுமன்றி யாழ் நகரப் பகுதிகளில் வீதியின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுவருகிறது.
                                                யாழ். நகரில் அண்மைக்காலமாக சனக் கூட்டம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதனால் வாகனங்களின் தொகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வீதியின் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் போக்கு வரத்தினை மேற்கொள்வதில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
                                                அத்துடன் இரவில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் முறையான தரிப்பிட விளக்குகள் இன்றி தரித்து விடப்படுவதனால் வாகனம் நிற்பதை அறியாமல் பிறவாகனங்கள்  அவற்றுடன் மோதுப்படும் அபாயமும் நிலவுகின்றது.                                              இவ்வாறான  இடங்களில் பொலிசார் கடமையில் ஈடுபடுவதும் குறைவாகவே உள்ளது.

                                                   யாழ். நகரப் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளள் குறித்து ஆராயும் வகையில் யாழ்.மாநகரசபையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
                                                   இந்த ஆலோசனைக் சுட்டத்தில் யாழ்.நகர்ப் பகுதி வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுககள் குறித்து ஆராயப்பட்டது.
                                                    இதில் பிரதானமாக யாழ்.நகரப் பகுதியில் பிரதான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிப்பதென இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகளுக்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதெனவும் குறிதட்த நேரம் தவிர்ந்த காலங்களில் இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த முடியாது எனவும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

                                              ஆயினும் இந்த தீர்மானங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே வாகன நெரில் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதற்கு பிரதாக காரணம் ன்பதும் சுட்டிகடகாட்டத்தக்கது. மேலும் இதன் காரணமாக நகரப் பகுதயில் விபத்துக்களும் ஏற்படும் அபாயம் தொடர்ந்து வருகிறது.
                                                 இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கம் அறிக்கை ஒன்று திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மக்களின் பாதுகாப்பு ரீதியாக ஒவ்வொன்றையும் அறிக்கை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதன்படி 2006 - 2007 ஆம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

                                                    சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானனோர் விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாக சொல்கிறது. படுகாயமடைவோர் எண்ணிக்கை 2 ஆயிரம் கோடியை தாண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
~எனவே பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்~

No comments:

Post a Comment

 
Blogger Templates