Social Icons

Pages

Monday, January 2, 2012

இலங்கையின் பொக்கிஷம்

லங்கையின் பண்டைய கால வரலாற்றுக்களை தன்னகத்தே கொண்டு பிரம்மாண்டமான தோற்றத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றது தேசிய நூதனசாலைத் திணைக்களம்.             



அநுராதபுரம், பொலநறுவை, கண்டி மத்திய காலங்களின் அரிய நினைவுகளை தாங்கியபடி வெண்மையான நிறத்தில் அமைதியாக தென்படுகின்றது.

                                                   இங்கு பண்டைய நகரீகங்களின் அரிய பொருட்கள், கட்டிடத்தொகுதிகள், தூண்கள், சிற்பங்கள், நாணயங்கள், தளபாடங்கள், ஓவியங்கள், மற்றும் ஆரம்பகாலங்களில் போருக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் என பல்வேறுபட்ட நினைவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. ஆரம்ப வாயிலில்  பிரம்மாண்டமான அமர்ந்த நிலையிலான புத்தர்சிலையும் இருமருங்கிலும் சேதமுற்ற நிலையில் உள்ள நின்ற நிலையிலான புத்த சிலையும் காணப்படுகின்றது.

                                                         மேலும் பண்டைய கால அரசவம்சத்தினர் பயன்படுத்திய ஒவ்வொரு பொருட்களும் மிகவும் நுட்பமான கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள வேலைப்பாடுகள் அனைத்தும் தற்கால மனிதர்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வகையில் காணப்படுகின்றது. செதுக்கல்கள் ஒவ்வேன்றும் பண்டைய கால மக்களின் கலைத்துவத்தினை சிறப்பாக பிரதிபலிப்பதாக உள்ளது. அரச ஆசனமும் முடி, வாள் என்பனவும் பளிச்சிட்டு மின்னுகின்றது.

                                              ஓவியங்கள் பல சிகிரியா ஓவியத்தினை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. ஆக்காலத்தில் இருந்த நாணயங்களின் அளவுகள் ஒவ்வொன்னும் வியக்கவைக்கும் அளவுகளாக அமைந்துள்ளது.
மற்றும் போருக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் நீளம், குண்டுகளின் அளவு, ஈட்டி, வாள், கத்தி, பீராங்கிகள் என்னும் பல வகையான வடிவங்களில் ஆயுதங்கள்என்பனவும் காணப்படுகின்றது.

                                                 இவ்வாறாக அரிய பலவற்றை நாம் எங்கும் காணமுடியாத எமது நாட்டின் கலாச்சார அம்சங்கள் அனைத்தும் நிறைந்ததாக காணப்படுகின்றது எம் நாட்டின் பொக்கிஷம் என கூறக்கூடிய தேசிய நூதனசாலை திணைக்களம்.

No comments:

Post a Comment

 
Blogger Templates