Social Icons

Pages

Tuesday, May 1, 2012

உயிர் உறுஞ்சும் நுளம்பு

யாழ். மாநகரசபையினரின் எல்லைக்கு உட்பட்டு 300க்கும் அதிகான குடும்பங்களினை  உள்ளடக்கியதாக  அமைந்துள்ள  ஒரு மீனவக்கிராமமே நாவாந்துறை.



யாழ். நகரில் இருந்து மேற்காக 2கிலே மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது நாவாந்துறைக் கிராமம். இக்  கிராமத்திற்கு  அருகில் சென்றதுமே  காற்றிலே மிதந்து வந்த மீனின் வாடை அக்கிராமத்திற்கு அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்த்தியது.



கிராமத்துக்குள் நுழைந்ததும் அருகருகே  தொடர்ச்சியாக அமைந்திருந்த குடிசை வீடுகளும் அதனிடையில் சில கட்டிட வீடுகளும்  வீதிகளின்  ஓடித்திரியும் சிறுவர்களும்  கடை ஓரமாய்  உட்காந்து பேசிக்கொண்டிருக்கும்  ஆண்களும் தண்ணீர் குடத்துடன் வரும் பெண்களும் இடுப்பினில் குழந்தையினை வைத்துக் கொண்டு கடையில் மரக்கறி வாங்குவதற்கு விலை பேசிக்கொண்டிருப்பதும் என அக்கிராமமே பரபரப்புடன் காணப்பட்டது. இவை அனைத்தும்  அக்கிராத்தினை பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. 
இப்படி அமைந்திருக்கும் கிராமத்தில் என்னதான் பிரச்சனை? அங்குள்ள மக்கள்  அனைவரும் கூறும் தாரக மந்திரமமாகவே மாறியது. துர்நாற்றம்  என்றும் அதனால் இங்கு இருக்க  முடியவில்லை என்றும் ஒவ்வொருவரும் கூறத்தொடங்கினர்.

வடிகான்கள்  எங்கும் தேங்கி நிற்கும் சேறுகள் அதனிடையில் தமது வாழ்வை நடாத்தும் குடம்பிகளின் கூட்டமும் இதனால் டெங்கு நோயின் தாக்கதில் பாதிக்கப்பட்டதாக கூறும் மக்கள் ஒரு புரம். இதைப்பற்றி கூறிய  வர்களோ “இந்த கான் இப்படியே தான் உள்ளது.   மாநகரசபையினர் இக் கான்கள் துப்பரவு செய்தாலும் இங்கு சில நேரத்தின்  பின்னர்  மீண்டும் இதே நிலைதான். காரணம் கான்களில் தேங்கி நிற்கும் நீர் வடிந்து செல்ல முடியாதளவில் இக் கான் அமைந்துள்ளது. இதனை துப்பரவு செய்தாலும் இங்குள்ளவர்களின்  கவனயீனமும் இதற்கு  காரணம்”  எனவும் சிலர் கூறுகின்றனர்.


மாநகரநபையினர் கான்களை துப்பரவு செய்வதாக கூறினாலும் அவை வீதியோரங்களில் காணப்படும் வடிகான்களை மட்டுமே. ஆனால் அவை வடிந்து செல்லும் நீரானது சென்று  கடலுடன் கலப்பதினை காணமுடிகிறது. சரியான முறையில் வடிந்து செல்லாது இடையில் தேங்கி  குடம்பிகளின் மைதானமாகவும் மாறி உள்ளது. கடலுடன் கலக்கும் இடம் குப்பைகளினால் நிறைந்தும் உள்ளது. அதன்  துர்நாற்றமோ எம்மை துரததியது. அருகே பல  குடியிருப்புக்கள்.  இங்கேயும் வாங்கோ என அழைத்தார் ஒரு பெண். ஏன்ன  என்று புரியாமல் சென்றோம்.

நாவாந்துறை சந்தையின் அருகே உள்ள வீதிப்புரமாக கூட்டிச்சென்றார். துர்நாற்றமோ வாந்தி வரவைத்தது. இடையில் ஒரு கதவினை திறந்தனர். கண்ணால்  பார்க்கவே முடியவில்லை மாட்டின் தலை எழும்புகள், தோல்  என அருவருப்பை அதிகரித்தது. ஈக்கள் அதன் மேல் குடித்தனம் நடத்தியது. அதைப்பற்றி  கேட்டபோது   “சந்தையில்  வெட்டிய மாட்டின் கழிவுகள் இங்கே தான் பொடுகின்றார்கள். அதனை எடுப்பதற்காக மாநகரசபையின் வண்டி வந்து நிற்கும் போது இவ்விடத்தில் எவரும் துர்நாற்றம் காரணமாக நிற்க கூட மாட்டார்கள்.  இக்கழிவுகளை குடியிருப்புகள்  இருக்கும் பகுதியில் போடுவதால் எம்மால் வீட்டில் இருக்கமுடிய வில்லை எனவும் கூறினார். அவர்கள் இங்கு கழிவுகளை பொடடு விட்டு சென்று விடுவார்கள். இங்குள்ள  மக்களின் நிலையினை அவர்கள் சிந்திப்பதில்லை என ஆதங்கத்துடன் அப் பெண்  கூறினார்.

கடற்கரை யோரமாய்  மாநகரசபையினர் கொட்டும்  குப்பைகளை கிழரும் காகங்கள் எமது வீடுகளின மேல் தூக்கிவந்து போட்டு விடுகின்றது எனவும் கூறினர்.  அப்பகுதிக்கும்  சென்று  பார்த்தோம்; குப்பைகளால் குவிந்து மலைபோல்  இருந்தன.

இவற்றினை குடியிருப்புகளின் பகுதிகளில் கொட்டும் மாநகரசபையினர் இங்கும்  மக்கள் தான் வாழ்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் பிரதம பொது சுகாதார பரிசோதகர் கே.எ.ஜீவநாதன் அவர்கள் கூறுகையில் நாவாந்துறையில்  டெங்கு நோய்த்தாக்கம் இருந்துள்ளதாகவும்  தாங்கள் காண்களை  துப்பரவு    செய்தால் அப்பகுதிமக்கள் அதனை முறையாக பாவிக்காது அதனுள் குப்பைகள் பொடுவாதாகவும் கூறினார். இதற்கான விழிப்புனர்வு மக்களுக்கும் தேவை எனவும் அவர் குறிப்பட்டார்.

இவ்வாறாக நாவாந்துறை கிராமமானது பல இடர்களுக்கு  உள்ளான நிலையில் நாளுக்கு நாள் மாசடைந்து கொண்டே செல்கின்றது. அப்பகுதியின் சுகாதாரத்தினை பேண வேண்டிய பொறுப்பு  பகுதி மக்களுக்கும் மாநகரசபையினருக்குமே உள்ளது.

No comments:

Post a Comment

 
Blogger Templates