Social Icons

Pages

Thursday, July 28, 2011

சர்வறோ டாலியின் வழிந்தோடும் கடிகாரம்


               1931ம் ஆண்டு சர்வறோ டாலி இந்த ஒவியத்தினை வரைந்தார். கன்வஸ் துணியில் எண்ணை வர்ணம் கொண்டு இச் சித்திரம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. இச் சித்திரத்தில் பொருட்கள் யாவும் யதார்த்தம் அற்ற தன்மையை கொண்டுள்ளது.
                  இதில் கரைந்து போகும் மணிக்கூடு மூன்று காணப்படுகிறது.  ஒரு மணிக்கூடு மரத்தின் கிளையில் துணிபோன்ற அமைப்பில் தொங்குகின்றது. மற்றைய மணிக்கூடு இரண்டும் பொருட்கள் இரண்டின் மீது தூக்கப்பட்டுள்ளது. இதன் பின்னனியில் காணப்படும் தரைக்காட்சி சீனச் சித்திரக் கலையை நினைவு படுத்துகின்றது. இவ் ஒவியம் வழிந்தோடும் கடிகாரம் என்றும் அழைக்கப்படும்.

சர்வறோ டாலி

             ஸ்பானிய நாட்டின் பாசிலோனிய நகரின் அருகில் உள்ள கிராமத்தில் 1904ல் சர்வறோ டாலி பிறந்தார். மற்ரிக் நகரத்து நுன்கலை கல்லூலியில் நுன்கலைபயிள்றார். 1928ம் ஆண்டு தன்னை சரிலிச வாதியாக இணைத்துக் கொண்ட டாலி ஒவியத்தில் ஒரு சிக்மன் பிறைற் ஆகவே செயற்பட்டார்.
            ஓவியப் பொருட்களின் தெரிவு, ஒவிய வரைமுறையில் புதுப்புது ஒவிய உருவாக்கம், விலக்கு அபயவத்தோடு கூடிய மனித உருவாக்கங்கள், பொய்யானதும், மெய்யானதுமான கலைப் படைப்புகள் என்பன சர்வறோ டாலியின் படைப்பாக இருந்தது. விநோதமான கனவு நிலைக் காட்சிகள் டாலியின் ஒவியங்கள் வெளிப்படுத்துகின்றது.
               பல நூற்றாண்டுகளாக ஒவிய உலகில் போற்றப்பட்டு வந்த அடிப்படைகளை தகர்க்கும் வகையில் டாலியின் சிந்தனைகள், படைப்புகள் மூலம் வெளிப்பட்டது. டாலியின் ஒவியங்களில் ஒவியப் பொருளை இலகுவில் கண்டுபிடித்து விடலாம். ஏல்லோராலும் அறியப்பட்ட பொருட்கள் டாலியின் ஒவியங்களில் கற்பனை பொருந்திய விசித்திர வடிவமாக இருந்தது. இவருடைய ஒவியங்களில் நீங்காத கனவு, தீப்பற்றிய சிலந்திக் கால் உடைய ஒவியம் சிறப்புக்குரியனவாகும்.

Tuesday, July 5, 2011

அசமந்தப்போக்கால் அகற்றப்படாத கழிவுகள்

        யாழ்ப்பாணம் சந்தைப்பகுதியில் கழிவுப் பொருட்கள் சரியானமுறையில் அகற்றப்படாமல் காணப்படுகின்றது.

       கழிவுகளை சரியானமுறையில் அகற்றாமையினால் சந்தைப்பகுதியில் காணப்படும் கட்டாக்காலி நாய்கள். ஆடுகள் என்பவற்றினால் கழிவுகள் கிழறப்பட்டு பரவிக்காணப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் வியாபாரிகளும் கொள்வனவாளர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

       இந்த சந்தைப்பகுதி மாநகரசபையினரின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது.



 
Blogger Templates