Social Icons

Pages

Thursday, July 28, 2011

சர்வறோ டாலி

             ஸ்பானிய நாட்டின் பாசிலோனிய நகரின் அருகில் உள்ள கிராமத்தில் 1904ல் சர்வறோ டாலி பிறந்தார். மற்ரிக் நகரத்து நுன்கலை கல்லூலியில் நுன்கலைபயிள்றார். 1928ம் ஆண்டு தன்னை சரிலிச வாதியாக இணைத்துக் கொண்ட டாலி ஒவியத்தில் ஒரு சிக்மன் பிறைற் ஆகவே செயற்பட்டார்.
            ஓவியப் பொருட்களின் தெரிவு, ஒவிய வரைமுறையில் புதுப்புது ஒவிய உருவாக்கம், விலக்கு அபயவத்தோடு கூடிய மனித உருவாக்கங்கள், பொய்யானதும், மெய்யானதுமான கலைப் படைப்புகள் என்பன சர்வறோ டாலியின் படைப்பாக இருந்தது. விநோதமான கனவு நிலைக் காட்சிகள் டாலியின் ஒவியங்கள் வெளிப்படுத்துகின்றது.
               பல நூற்றாண்டுகளாக ஒவிய உலகில் போற்றப்பட்டு வந்த அடிப்படைகளை தகர்க்கும் வகையில் டாலியின் சிந்தனைகள், படைப்புகள் மூலம் வெளிப்பட்டது. டாலியின் ஒவியங்களில் ஒவியப் பொருளை இலகுவில் கண்டுபிடித்து விடலாம். ஏல்லோராலும் அறியப்பட்ட பொருட்கள் டாலியின் ஒவியங்களில் கற்பனை பொருந்திய விசித்திர வடிவமாக இருந்தது. இவருடைய ஒவியங்களில் நீங்காத கனவு, தீப்பற்றிய சிலந்திக் கால் உடைய ஒவியம் சிறப்புக்குரியனவாகும்.

No comments:

Post a Comment

 
Blogger Templates