குடும்பத்தில் குடும்பத்தலைவனும் குடும்பத்தலைவியும் வேலைக்குச் சென்றாலே வாழ்கைச் செலவினங்களை அனுசரித்துப் போகமுடியும் என்ற நிலையில் இன்றைய அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது.
வாழ்கைச் செலவினங்களை சமாளிப்பதற்கு மும்முரமாக சுழன்று கொண்டு திரியும் பெற்றோர் பிள்ளைகள் மீதான கவனிப்பைத் தவறவிடுகின்றனர். பெற்றவர்களின் அரவணைப்பும் அன்பும் இன்றி பிள்ளைகள் வேலைக்காரர் தொலைக்காட்சி போன்றவற்றுடன் வாழ ஆரம்பிக்கின்றனர்.
இவ்வாறு வளரும் குழந்தைகள் சிறுவர்களாக பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சனையும் ஆரம்பமாகின்றது. நம்பிக்கை என்பதை மூலதனமாக கொண்டு பிள்ளைகளை அயலவர் தெரிந்தவர் உறவினர் என்போருடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றர். சில நாட்களோ மாதங்களோ கழிந்தபின் பிள்ளைகளை கூட்டிச் செல்லும் நல்லவர்களின் சுயரூபம் தெரிய வருகின்றது.
கடந்த நான்கு மாதங்களில் 35 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இங்கு நாம் பேசவந்தது நடந்துமுடிந்த செயல்களைப்பற்றியதல்ல. ஏன் இவ்வாறு நடக்கின்றது என்பதை பற்றியே ….
தேரிந்த மாமா தாத்தா சித்தப்பா ஆட்டோ மாமா என்ற உறவு முறைகளுடன் சின்னஞ் சிறு பிஞ்சுகள் நம்பிச் செல்லுகின்றன. கூட்டிச் செல்வோர் மீது அவர்களது நடத்தை மீது மாற்றம் ஏற்படும் போது தாயிடமோ தந்தையிடமோ கூற முற்படுகிறது. வேலைக்களைப்பில் வரும் பெற்றோர் அப்பிஞ்சின் குமுறலை செவிமடுக்க மறுக்கின்றனர். செவிமடுப்பினும் கூட்டிச்செல்வோரையே அதிகம் நம்புகின்றனர். சிலபெற்றோர் நடந்து முடிந்தபின்ரே தலையில் கைவைத்து நிலைகுலைகின்றனர்.
இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவது பதினாறு வயதிற்குட்பட்ட சிறுமிகளே. இதனைப் புரிவோர் அநேகமாக முதியவர்களாகவே இருப்பது வருத்தத்திற்குரியது. பேற்றோர்களே..! நீங்கள் படித்தவர்கள் என்பதால்தானே இரவு பகல் பாராமல் உழகை;கின்றீர்கள் ஒரு நாளில் கொஞ்ச நேரம் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தினால் என்ன? கவனம் செலுத்தும் பட்சத்தில் எதற்கு ரியூசன்? விசேட வகுப்பு?
தினம் தினம் பத்திரிகைகளில் இவ்வாறான செய்திகளைப் படிக்கும் பெற்றோர் தொடர்ந்தும் இத்தகய தவறுகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் சற்று சிந்தியுங்கள்! சோத்துச் சேர்ப்பதை விட பிள்ளையின் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.
இத்தகைய தவறுகளுக்கு எத்தகைய தண்டனைகள் சட்டத்திலுண்டு என்பது பலருக்குத் தெரியாது. இதனை வெளிக்கொணர்வது ஊடகங்களின் கடமையாகும். பேற்றோர் மத்தியில் சமூகத்திலும் சிறுவர் துஸ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியபின் மீண்டும் ஓர் ஆய்வினை நிகழ்த்திப் பார்க்கலாம்.....
~தண்டனைகள் கடுமையாகும்போது தவறுகள் குறைகின்றன~

No comments:
Post a Comment