Social Icons

Pages

Thursday, November 10, 2011

பேஸ்புக்கின் இன்றைய நிலை




                        
  பேஸ்புக் இணையத்தளமானது ஹவாட் ஸ_க்கர் பொக் என்பவரால் தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவாக உருவாக்கப்பட்டது. இதனால் உறவுகளின் இணைவு நட்பின் இணைவு வாழ்கை துனையை கண்டுபிடித்தல் குற்றம் செய்வோர் மாட்டிக்கொள்ளல் போன்ற பல நன்மைகள் விளைந்தாலும் தீமைகளும் விளைகின்றன.



                         பேஸ்புக் தற்போது மிகப்பெரிய புரட்சிசெய்துள்ளது. சோல்லப் போனல் இப்போது உலகில் பேஸ்புக் பற்றி அனேகமானோர் அறிந்துள்ளனர். இன்று இந்த பேஸ்புக்கில் 56கோடி பேர் வரை உறுப்பினர்களாகவுள்ளனர்.

                         காதலில் தோல்வியடைந்த மாணவனால் கவலையை மறக்க உருவாக்கப்பட்ட இந்த பேஸ்புக் தற்போது இந்த மாணவனை உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவராக்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பேஸ்புக் 7 வருடங்களுக்குள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. 50கோடி பேர் கொண்ட இத்தளத்தில் தினமும் 35 மில்லியன் பேர் தங்களது நிலையை பதிவு செய்கின்றனர். 60 மில்லியன் பேர் தினமும் தொடர்பில் இருக்கின்றனர். ஓவ்வொறு மாதமும் 3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தமது புகைப்படங்களை வெளியிடுகின்றனர். ஓவ்வொறு பேஸ்புக் உறுப்பினருக்கும் அண்ணளவாக 100 நண்பர்கள் உள்ளனர். ஒரு உறுப்பினர் ஒருநாளில் ஆகக் குறைந்தது 50 நிமிடங்களை பேஸ்புக்கில் செலவிடுகின்றனர். 70 மொழிகளில் பேஸ்புக் உள்ளது.

                      பேஸ்புக்கில் மக்களுக்கு இத்தகைய ஆர்வம் வரக்காரணம் பேஸ்புக் வழங்கும் கணக்கில் அடங்கும் வசதிதான் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினையும் கவரும் இணைய விளையாட்டுக்கள் மற்றும் அனைத்து நண்பர்களையும் தன்பக்கம் இழுக்க தாமே சிலவற்றை உருவாக்க கூடிய பயன்கள் போன்றவை மக்களை பேஸ்புக் முன்னால் கட்டிப்போட்டு வைத்துள்ளது.
                   பேஸ்புக் என்பது பலரின் வழிகாட்டியாக இருக்கின்ற அதேவேளை இன்னும் சிலருக்கு அவர்களின் வாழ்வையே மாற்றி அமைப்பதாகவும் உள்ளது.
                  மனிதத் தொடர்பிற்காக உருவாக்கப்பட்டவை இன்று சில மனிதர்களினாலையே தொடர்புகளை துண்டிக்கும் நிலைமைக்கும் வந்துள்ளது.


                       இந்த பேஸ்புக்கின் மூலம் தவறு செய்யும் சிலரின் செயற்பாடுகளிற்கு இரையாவது அனேகமாக இளம் பெண்களே.
                       பேஸ்புக் பாவனையாளர்களில் அதிகமானோர் தமது புகைப்படங்களையும் தொலைபேசி இலக்கங்கள் வீட்டு முகவரிகளையும் இதில் வெளியிடுவதுதான் குற்றங்கள் இடம்பெறக்காரணமமகின்றன.
                    பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் சில விசமிகள் அந்தப் புகைப்படங்களை தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
                     இவ்வாறு பதிவிறக்கம் புகைப்படங்களில் உள்ள பெண்களின் தலைகளை கிராப்பிக்ஸ் மூலம் வெட்டியெடுத்து வேறு நிர்வாணப் பெண்களின் உடலுக்கு பொருத்தி விடுகின்றனர். இதனைப் பார்க்கும் போது உண்மையில் பேஸ்புக்கில் உள்ள பெண்போல் காணப்படும் இந்தப்படத்தை இணையத்தளத்திலும் உலாவவிடுகின்றனர்.

                      இன்னும் சிலர் பேஸ்புக்கில் உள்ள அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து பல ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றி அவரின் பெயர் முகவரி தொலைபேசி இலக்கங்கனைப்போட்டு ஒரு மணிநேரத்திற்கு ஒரு நாளைக்கு என விலைகளை நிர்ணயித்து ஒரு விபச்சாரிபோல் சித்தரித்து விடுகின்றார்கள்.
  ஆபாச முகவரியில் உலாவருவோர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அந்நபருக்கு தொல்லை கொடுக்கின்றார்கள்.



                    இதனால் அந்த பெண்களின் நின்மதி தொலைந்து அவர்களின் வாழ்கை கேள்விக்குறியாக மாறி விடுகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உண்டு.
                  இவ்வாறான குற்றங்கள் மட்டுமன்றி பேஸ்புக்கினால் பெண்களின் வாழ்வை சுறையாடுதல் ஆண்களையும் ஏமாற்றுதல் நகை பணம் போன்றனவும் பறிகொடுத்தோர் பலர் உள்ளனர். 
                            இது மட்டுமன்றி சிலர் இதற்கு அடிமைப்பட்டவர்கள் போல் என்நேரமும் இதில் மூழ்கி உள்ளனர்.

                       அது மட்டும் அன்றி இவை இன்று தொலை பேசிகளிலும் பார்ககும் அளவிற்கு தொழில் நுட்பம் அமைந்து இதன் பாவனை அதிகரித்து விட்டது.                                 நன்மை கருதி உருவாக்கப்பட்ட பேஸ் புக்கை இன்றைய சமூகம் தனது முறையற்ற செயல்களால் இன்று தடைசெய்ய வேண்டும் என்ற நிலையிற்கு கொணர்ந்து விட்டனர்.
                  அத்துடன் பேஸ்புக் பாவனையாளர்களும் இதில் தமது தனிப்பட்ட விடையங்களை முடிந்த வரைக்கும் தவிக்க வேண்டும். எவற்றையும் பற்றி யேசிக்காது எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு பின்னர் பேஸ்புக்கை குற்றம் சாட்டுவதில் பயனில்லை. எனவே பேஸ்புக் குற்றங்களை இல்லாதொழிப்பது பாவனையாளர்களின் கையிலேயே உள்ளது. ஊங்களுக்கு கிடைத்துள்ள நன்மைகளை சரிவரப் பயன்படுத்துங்கள். அதை துஸ்பிரையேகம் செய்யாதீர்கள்...
         

No comments:

Post a Comment

 
Blogger Templates