Social Icons

Pages

Featured Posts

Tuesday, May 1, 2012

உயிர் உறுஞ்சும் நுளம்பு

யாழ். மாநகரசபையினரின் எல்லைக்கு உட்பட்டு 300க்கும் அதிகான குடும்பங்களினை  உள்ளடக்கியதாக  அமைந்துள்ள  ஒரு மீனவக்கிராமமே நாவாந்துறை.



யாழ். நகரில் இருந்து மேற்காக 2கிலே மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது நாவாந்துறைக் கிராமம். இக்  கிராமத்திற்கு  அருகில் சென்றதுமே  காற்றிலே மிதந்து வந்த மீனின் வாடை அக்கிராமத்திற்கு அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்த்தியது.

Wednesday, April 25, 2012

அபிவிருத்திப் பாதையில் அலையும் ஆன்மீகம்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் ஆன்றோர். ஊருக்கொரு கோயிலை உருவாக்கினர் எமது முன்னோர்கள். இன்று குடிமனைகளைவிட கோயில்கள் பெருகிவிடும் போலுள்ளது.

எங்கே பார்த்தாலும் கேயில், கோயில். இன்று இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே இருப்பதற்கு இவ்வாறு கண்மூடித்தனமாக எழுப்பப்படும் கட்டிடங்களும்  ஒரு காரணம்தான்.

Monday, February 6, 2012

நாட்டார் கலை

நாகரீக போர்வையில் பண்டையகலைகள் பல அரிகிய வண்ணமே உள்ளது. அதில் ஒன்றான நாட்டார் கலையின் ஆற்றுகை பல காலங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்டது. இதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமையமும் செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து தென்னிந்திய நாட்டார் கலைகளை ஆற்றுகைப்படுத்தியது.

Sunday, January 15, 2012

முடிவினைத் தேடி…


எதிர்பார்த்து சென்றதொன்று எதிர்பாராமல் கிடைத்ததோ சில…கிராமமோ 86 குடும்பங்களைத்தான் கொண்டுள்ளது. அப்படியிருக்க என்னதான் இவர்கள் கோரிக்கை..???

யாழ்ப்பாணத்தில் இருந்து 2கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதுதான் காக்கை தீவு. J/133 கிராமசேவையாளர் பிரிவினை கொண்டமைந்துள்ள ஒரு மீனவக்கிராமம்.

Tuesday, January 10, 2012

இந்த நிலமைக்கு யார் காரணம்??????

         “குழாய் தண்ணில கால்வாய் தண்ணி கலக்கிறதால எல்லாருக்கும் சரியான வருத்தம்  வருது இது பற்றி உரியாக்கட்ட சொன்னாலும்  யாருமே  எதுவும் பண்றதில்ல” என்று ஆதங்கத்துடன் தமது நிலையை வெளிப்படுத்தினர் “லாக் நகர”பெண்கள் சிலர்.

Thursday, January 5, 2012

21 ஆண்டுகளின் பின் சொந்த மண்ணில்

                         யாழ்ப்பாணம் வலிவடக்கு பிரதேசத்தில், தெல்லிப்பழை உயர் பாதுகாப்பு வலயத்தில்  அமைந்திருந்த கொல்லங்கலட்டி பிரதேசத்தில்  இருந்து 1990இல்  இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் 2011 ஆவணிமாதம் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

Tuesday, January 3, 2012

பல்தேசியக் கம்பனிகளின் விளம்பரப்பலகைகள்

                பல்தேசியக்கம்பணிகளின் வருகையால் கிரிக்கெட் மைதானம் போல் ஆகிவிட்டது தற்போதைய யாழ். நகரம். திரும்பிய இடமெல்லாம் விளம்பரங்கள்  தான் நிறைந்துள்ளன. பத்திரிக்கைகளிலும் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலுமே அதிக ஆதிக்கம் செலுத்திய விளம்பரங்கள் இன்று வீதியின் ஒரு பாகமாய் இணைந்துவிட்டது.
                 இன்நிலைமைக்கு காரணம் அவர்களின் பொருட்களின் தரம் குறைவாக உள்ளமையா? அல்லது வாடிக்கையாளரை அதிகப்படுத்துவதாக நினைத்து இவர்கள் தேடும் வழிகளா? என்பது கேள்வியாகவெ உள்ளன.

 
Blogger Templates